முகப்புகோலிவுட்

‘டாக்டர்’ சிவகார்த்திகேயனுடன் இணையும் கதாநாயகி யார்..? இன்னும் சில அப்டேட்ஸ் இதோ..

  | December 05, 2019 11:27 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

 • ‘ஹீரோ’ திரைப்படத்தையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படம் ‘டாக்டர்’
 • இப்படத்தை ‘கோலமாவு கோகிலா’ நெல்சன் இயக்குகிறார்.
 • இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் திரைப்படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி, இணை நடிகர் மற்றும் காமெடி நடிகர் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

கோலமாவு கோகிலா படப் புகழ் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கவுள்ள திரைப்படம் ‘டாக்டர்'. இப்படத்தை தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஹீரோ திரைப்படத்தை தயாரித்துள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. மேலும். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படம் குறித்த இந்த முதற்கட்ட தகவல்கள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ள மேலும் சில பிரபலங்கள் குறித்த அப்டேட்டுகளை நேற்று மாலை அடுத்தடுத்து வெளியிட்டது படக்குழு.
முதலாவதாக, நடிகர் வினய் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் வினய் ராய் உன்னாலே உன்னாலே திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து, ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை, துப்பரிவாளன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக யோகி பாபு இப்படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. யோகி பாபு இதற்குமுன் சிவகார்த்திகேயனனுடன் மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கில் நடிகர் நானியின் கேங் லீடர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர் தமிழில் நடிக்கவுள்ள இரண்டாவது படமாகும். இதற்கு முன் ஜே. ராஜேஷ் கண்ணன் இயக்கும் மாயன் திரைப்பத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com