முகப்புகோலிவுட்

‘மாஸ்டர்’ படத்தில் நடிகராக அறிமுகமாகும் ‘பிகில்’ நடிகரின் தந்தை.!!

  | July 03, 2020 20:35 IST
Bigil Kathir

கடைசியாக, சென்ற ஆண்டு வெளியான ‘ஜடா' எனும் திகில் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த கதிர், தற்போது ‘சர்பத்' திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ‘மதயானை கூட்டம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கதிர். இப்படத்தைத் தொடர்ந்து ‘கிருமி', ‘என்னோடு விளையாடு', ‘விக்ரம் வேதா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடைய திரைத்துறை பயணத்தில் திருப்பு முனையாக அமைந்த படம் ‘பரியேறும் பெருமாள்'.

அட்லீ இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பிகில்' திரைப்படத்தில் கதிர் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் விஜயுடன் நடித்ததை தனது ‘நீண்ட நாள் கனவு நனவானது' என்று கூறியிருந்தார். 

இப்போதைய சுவாரஸ்யமான தகவ்ல என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியீட்டுக்காக தயாராக இருக்கும் ‘மாஸ்டர்' திரைப்படத்தில், இளம் ஹீரோ கதிரின் தந்தை ஒரு நடிகராக அறிமுகமாகிறார். அவரது தந்தை விஜய் சேதுபதியுடன் வில்லன்களில் ஒருவராக நடிக்கிறார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அப்பா மற்றும் அம்மாவின் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள கதிர் “இந்த 2 பேரின் பயணம் எப்போதுமே ஒரு உத்வேகமாக இருந்தது. நான் இன்று இருப்பதற்கு அவர்களின் ஆர்வமும் கனவும் தான் காரணம் (மேலும் நான் இந்த ஆத்மாக்களை அப்பா & அம்மா என்று அழைக்கிறேன்) 53 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கனவு நமது மாஸ்டரால் உண்மையானது. இது மிகச் சிறிய பகுதி என்றாலும், அது அவரது வாழ்நாள் கனவை நிறைவேற்றியது!” என்று பதிவிட்டுள்ளார். 

கடைசியாக, சென்ற ஆண்டு வெளியான ‘ஜடா' எனும் திகில் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த கதிர், தற்போது ‘சர்பத்' திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com