முகப்புகோலிவுட்

அஜித்தின் ‘வலிமை’ அப்டேட் கொடுத்த போனி கபூர்..!

  | May 29, 2020 21:21 IST
Ajith  Kumar

'வலிமை' படப்பிடிபில் 50 சதவீதம் முடிந்தது

‘தல' அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனி கபூர் மீண்டும், அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் அதே கூட்டணியில் ‘வலிமை' திரைப்படத்தை தயாரித்துவருகிறார். அஜித்தின் 60-வது திரைப்படமாக அமைந்துள்ள இப்படத்தை ‘சதுரங்க வேட்டை', ‘தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய திரைப்படங்களுக்காக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநரான எச். வினோத் தானே எழுதி இயக்கிவருகிறார் என்பதால், இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, படத்தின் சில முக்கிய காட்சிகள் ஜார்டன் நாட்டில் படமாக்கப்பட திட்டமிடப்பட்டது. அந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதையடுத்து, படப்பைடிப்புகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மற்ற பல முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்த அப்டேட்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அதேபோல், அஜித்தின் தீவிர ரசிகர்களும் வலைமை படம் குறித்த ஏதேனுமப்டேட்களுக்காக தவமாய் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இறுதியாக தயாரிப்பாளர் போனி கபூரிடமிருந்து ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட் கிடைத்துள்ளது. போனி கபூர் ஒரு முன்னணி பத்திரிகைக்கு அளித்த சமீபத்திய பேட்டியில் பேசியபோது, அஜித் குமார் தனது 60-வது படமாக நடிக்கும் ‘வலிமை' ஒரு பெரிய அதிரடி திரைப்படம், அது 50 சதவீதம் முடிந்தது என்று கூறினார். 

மேலும், அனைவரின் ஆரோக்கியத்துக்கும் முன்னுரிமை கொடுத்து, COVID 19 தொற்றுநோய் முடிவுக்கு வந்த பின்னரே படப்பிடிப்பை மீண்டும் தொடங்குமாறு படக்குழுவிடம் அஜித் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், 'வலிமை' படத்தின் ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று இணையத்தில் செம வைரலாகிவருவது குறிப்பிடத்தக்கது.


யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில், ‘சூப்பர் காப்' அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி, யோகி பாபு மற்றும் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com