முகப்புகோலிவுட்

அருண் விஜய்க்கு வில்லனாகும் தயாரிப்பாளர்!! பாக்ஸர் சுவாரஸ்யமான அப்டேட்.!

  | June 24, 2020 12:23 IST
Boxer

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முன்னதாக அனுராக் காஷ்யப்புடன் குழு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக்‌ஷன் ஸ்டார் அருண் விஜய் நடிப்பில், Etcetera Entertainment பேனரில் வி. மதியழகன் தயாரிப்பில், விவேக் இயக்கும் திரைப்படம் ‘பாக்ஸர்'. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ‘இறுதி சுற்று' புகழ் ரித்திகா சிங் நடிக்க, உடன் சஞ்சனா கல்ரானி ஒரு முக்கியமாக வேடத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, லண்டன் ஒளிப்பதிவாளர் Markus A Lujungbern ஒளிப்பதிவு செய்கிறார். 

பாக்ஸர் திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று மாலை, தளபதி விஜயின் ‘மெர்ஸல்' திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் பெரிதும் அறியப்பட்ட ஶ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸின் CEO ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கிறார். இதற்கிடையில், இப்போது இப்படத்தின் வில்லன் குறித்த சுவார்ஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

இப்படத்தை தயாரிக்கும் மதியழகன் தான் அருண் விஜய்க்கு வில்லநாக நடிக்கிறார். இது அவரது இரண்டாவது படம் - அவர் ஏற்கனவே நடன இயக்குனர் பாபி ஆண்டனியின் இயக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். பூட்டுதலின் போது தனது வீட்டில் தகுந்த உடலமைப்பைப் பெற பயிற்சி எடுத்துவரும் அவர், மேலும் ஆன்லைனில் நடிப்பு வகுப்புகளையும் எடுத்துவருகிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முன்னதாக அனுராக் காஷ்யப்புடன் குழு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

 இது குறைத்து மதியழகன் ஒரு தனியான பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், ஏற்கனவே அனுராக் காஷ்யப்புடன் இந்த பாத்திரத்திற்காக பேசி, அறிவிப்புகளை வெளியிட தயாராக இருந்த நிலையில், சில தளவாட சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும், இப்படத்தில் அருண் விஜய் மூன்று தோற்றங்களைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். படப்பிடிப்பு முடிக்க மொத்தமாக 60 நாட்கள் தேவைப்படும் நிலையில், எம்.எம்.ஏ குத்துச்சண்டை வீரராக அருண் விஜய் தோற்றமளிக்க வேண்டும், பின்னர் மீண்டும் எடையைக் குறைக்க வேண்டும். அனுராக்கை இவ்வளவு காலம் காத்திருக்க கேட்க முடியாததால், அந்த வேடத்தை செய்ய இயக்குநர் விவேக் தன்னிடம் கேட்டதாகக் கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com