முகப்புகோலிவுட்

'தனுஷ் 44' - கதாநாயகியாக இணையும் 'சைக்கோ' நாயகி

  | February 08, 2020 13:36 IST
Dhanush 44 With Sun Pictures

இந்த படத்திற்கு தனுஷ் கதை மற்றும் திரைக்கதை எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது.

துனுக்குகள்

  • 'தனுஷ் 44' - கதாநாயகியாக இணையும் 'சைக்கோ' நாயகி
  • தனுஷின் 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது
  • இந்த படத்திற்கு தனுஷ் கதை மற்றும் திரைக்கதை எழுத உள்ளதாக கூறப்படுகிறது
1998ம் ஆண்டு வெளியான 'The Monkey Who Knew Too Much' என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என்று ஐந்து மொழிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2013ம் ஆண்டு நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த '180' என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். 

விஜய், விக்ரம், சூர்யா என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நித்யா மேனன் நடித்துள்ளார். அண்மையில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில், இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷின் 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த  படத்திற்கு தனுஷ் கதை மற்றும் திரைக்கதை எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்