முகப்புகோலிவுட்

அருண்ராஜா காமராஜுடன் இணையும் ‘சைக்கோ’ நாயகன்..!

  | March 26, 2020 12:55 IST
Udhayanithi Stalin

2018-ஆம் ஆண்டில் வெளியான ‘கனா’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மான் கராத்தே, ராஜா ராணி போன்ற திரைப்படங்களில் நடித்து, நெருப்பு டா, வரலாம் வா பைரவா போன்ற பாடல்களை பாடிய நடிகரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் ‘கனா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2018-ஆம் ஆண்டில் வெளியான ‘கனா' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெண்கள் கிரிக்கெட் மற்றும் விவசாயத்தைப் பற்றி எடுக்கப்பட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புடன் வெற்றி பெற்றது.

இந்த படத்திற்குப் பிறகு, அருண்ராஜா ஒரு பாடகராகவும் பாடலாசிரியராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றிக்கொண்டிருந்தார் கொண்டிருந்தார். தற்போது ‘மாஸ்டர்' திரைப்படத்திலும் விஜய் பாடிய ‘குட்டி ஸ்டோரி' பாடலை எழுதி மேலும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில், அவரது இயக்கத்தில் இரண்டாவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் இணையவுள்ளார். இந்த படத்தை அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை' மற்றும் ‘வலிமை' திரைப்படங்களின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ' திரைப்படத்தில் கண்பார்வையற்றவராக நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 



    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்