முகப்புகோலிவுட்

ட்விட்டரில் வைரலாகும் முரட்டு சிங்கிள் இயக்கும் ‘பப்பி’ பர்ஸ்ட் லுக்!

  | August 14, 2019 15:21 IST
Yogi Babu

துனுக்குகள்

 • இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்.ஜே,பாலாஜி வெளியிட்டார்
 • யோகி பாபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
 • வனமகன், போகன் படங்களில் நடித்த வருண் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்
இயக்குநர் நட்டு தேவ் இயக்கத்தில் வருண் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பப்பி'. இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் வருண், வனமகன், போகன், ஆகிய படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்திற்கு தரண்குமார் இசை அமைக்க தீபக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதனை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டார். இது வெளியான சில நிமிடங்களில் டுவிட்டரில் டிரெண்டானது. இளைஞர்களை கவரும் வகையில், இந்த போஸ்டரில் எழுத்து-இயக்கம் 'முரட்டு சிங்கிள்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com