முகப்புகோலிவுட்

'அசத்தலான 3 மில்லியன் வியூஸ்' - ரசிகர்களுக்கு நெகிழ்ந்து நன்றி சொன்ன விஷ்ணு..!

  | August 14, 2020 22:45 IST
F.i.r

துனுக்குகள்

  • கடந்த 2019ம் ஆண்டு எந்த படத்திலும் நடிக்காத விஷ்ணு விஷாலின் நடிப்பில்
  • சில தினங்களுக்கு முன்பு அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில்
  • டீஸர் தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருப்பது கண்டு மகிழ்ச்சி
நடிகர் விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . ‘நீர்பறவை', ‘முண்டாசுப்பட்டி',  ‘ஜீவா',  ‘இன்று நேற்று நாளை', ‘ராட்ச்சசன்' ஆகிய படங்களில் நடித்ததற்காக விஷ்ணு பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இறுதியாக 2018ம் ஆண்டு வெளியான ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்' என்ற படத்தில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ம் ஆண்டு எந்த படத்திலும் நடிக்காத விஷ்ணு விஷாலின் நடிப்பில் இந்த  ஆண்டு பல திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கிறது. காடன், ஜெகஜால கில்லாடி மற்றும் மோகன்தாஸ் ஆகிய திரைப்படைகள் இந்த லாக் டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள F.I.R திரைப்பட குழு அவருக்கு ஒரு surprise கொடுத்தது. 

மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் F.I.R. இந்த படம் விஷ்ணு விஷால் தயாரிப்பில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய பிறந்தநாள் அன்று இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் குறித்த ஒரு அசத்தல் காணொளியை வெளியிட்டது படக்குழு. இந்நிலையில் தனது படத்தில் டீஸர் தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார் விஷ்ணு விஷால்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com