முகப்புகோலிவுட்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விமர்சிக்கிறதா ஆர்.ஜே.பாலாஜியின் “LKG” போஸ்டர்?

  | January 24, 2019 20:31 IST
Lkg Movie

துனுக்குகள்

  • இந்த படத்தின் பாடல் ஒன்று வரும் 26ல் வெளியாகிறது
  • இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார்
  • இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார்
இயக்குநர் கே.ஆர். பிரபு இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் திரைப்படம் “LKG”. இந்த படத்தில் காமெடி நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிக்க அவருடன் ஜோடியாக நடித்திருக்கிறார் பிரியா ஆனந்த். இவர்களுடன் பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மற்றும் ஜே.கே. ரித்திஷ் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
 
முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படம், தற்போதைய அரசியலை விமர்சிப்பது போல இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்திருக்கின்றன.
 
 
7ogp4eeo

நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்ட ஆர். ஜே. பாலாஜி இனிமேல்தான் தரமான சம்பவங்களை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள் என்று பேசியிருந்தார். மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜியும், பிரியா ஆனந்தும் இணைந்து நிற்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். அந்த போஸ்டர் முன்னாள் தமிழக முதல்வராக இருந்து மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை நினைவுபடுத்துவது போல அமைந்திருப்பதால், இந்த படத்திற்கு அ.தி.மு.க வை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த படம் அரசியல் காமெடி படமாக இருக்கும் என்பதால் அரசியல் தலைவர்களை கிண்டல் செய்யும் விதமாக காட்சிகள் ஏதேனும் இடம் பெற்றிருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்க குடியரசு தினத்தன்று முதல் பாடல் வெளிவர இருக்கிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்