முகப்புகோலிவுட்

சிறந்த தமிழ் படம் ‘ஒத்த செருப்பு’..!சர்வதேச திரைப்பட விழாவில் விருது..!

  | December 20, 2019 12:22 IST
Chennai Film Festival

துனுக்குகள்

  • 17-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெற்றது.
  • இதில் 55-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து படங்கள் திரையிடப்பட்டது.
  • இவ்விழாவில் ‘ஒத்த செருப்பு’ சிறந்த தமிழ் படத்துக்கான முதல் பரிசு பெற்றது
பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு' திரைப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.

17-வது சர்வதேச திரைப்பட விழா இம்மாதம் 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபேற்றது.  சென்னையில் நடைபெற்ற இந்தத் திரைப்பட விழா, கேசினோ, தேவி, தேவி பாலா, ரஷ்ய கல்சுரல் செண்டர் மற்றும் அண்ணா திரையரங்குகளில் நடைபெற்றது. இதில் 55 நாடுகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.

இந்த விழாவில், வித்தியாசம் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் என்று சொல்லக்கூடிய நடிகர்-இயக்குனர் ஆர். பார்த்திபன் எழிதி, இயக்கி, ஒற்றை ஆளாக நடித்து இந்தாண்டு வெளியான  ‘ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் சிறந்த தமிழ் படத்துக்கான் முதல் பரிசை வென்றது.
அதையடுத்து, சில்லுக்கருப்பட்டி மற்றும் பக்ரீத் ஆகிய இரண்டு படங்களுக்கும் இரண்டாவது இடம் கொடுக்கப்பட்டது. மேலும், அசுரன், ராட்ச்சசன், ஜீவி ஆகிய படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்