முகப்புகோலிவுட்

‘இன்று நேற்று நாளை’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்க தேசிய விருதுபெற்ற நடிகரை தேர்வு செய்த இயக்குநர்.!

  | June 27, 2020 16:05 IST
R Ravikumar

தமிழில் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்க்ரிப்டை எழுதிவருகிறார் இயக்குநர் ரவிகுமார்.

சி.வி.குமாரின் திருகுமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இன்று நேற்று நாளை'. பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தின் மூலம் இயக்குநராக ரவிக்குமார் ராஜேந்திரன் அறிமுகமானார். இப்படத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றிபெற்றதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்க்ரிப்டை எழுதிவருகிறார் இயக்குநர் ரவிகுமார். 2021-ல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள இப்படத்தை இந்த முறை, ரவிகுமாரின் இணை இயக்குநர் கார்த்திக் இயக்கவுள்ளார். மேலும் ஜிப்ரான் இசையமைக்கவும், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

அண்மையில் ஒரு நேர்காணலில், ரவிக்குமார் ஆரம்பத்தில் தெலுங்கிலும் திரைப்படத்தை உருவாக்க விரும்புவதாகவும், நானி தான் தனது விருப்பம் என்றும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ஸ்கிரிப்டை அவர் விரும்பினாலும் மற்ற கடமைகள் காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை.

இப்போது, சிவா கார்த்திகேயனுடன் ‘அயலான்' படத்தை இயக்கிவரும் ரவிக்குமார், ‘இன்று நேற்று நாளை' திரைப்படத்தை இந்தியில் தேசிய விருது பெற்ற நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவுடன் ரீமேக் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். இந்த சுவாரஸ்யமான நேர இயந்திர திரைப்படத்தை ஆயுஷ்மான் எடுத்துக்கொள்வாரா என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com