முகப்புகோலிவுட்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியோடு இணையும் ராஷிகண்ணா-நிவேதா பெத்துராஜ்…!!!

  | March 08, 2019 15:39 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • இப்படத்தை இயக்குநர் விஜய் சந்தர் இயக்குகிறார்
  • நகைச்சுவை வேடத்தில் சூரி மற்றும் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார்கள்
  • விவேக்-மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள்
திமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை,' ‘நம்நாடு,' ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி,' கமல்ஹாசன் நடித்த ‘நம்மவர்' விஷால் நடித்த ‘தாமிர பரணி,' அஜித் நடித்த `வீரம்' மற்றும் பாதாள பைரவி, மாயா பஜார், மிஸ்ஸியம்மா உள்பட 60-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த நிறுவனம், விஜயா புரொடக்‌ஷன்ஸ்.
 
இந்த பட நிறுவனம் அடுத்து மக்கள் செல்வன்  விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இயக்குநர் விஜய் சந்தர் இப்படத்தை இயக்க பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார்.
 
இந்த படத்தில் இன்னொரு ஸ்வாரஸ்யமான செய்தி  விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகிய இரண்டு கதாநாயகிகள் ஜோடிகளாக நடிக்கிறார்கள். நகைச்சுவை வேடத்தில் சூரி மற்றும் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார்கள். நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷன்,  மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீமன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஆர்.வேல்ராஜ் ஒளிப் பதிவு செய்ய விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள். படப் பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்