முகப்புகோலிவுட்

ராதா ரவிக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்

  | March 25, 2019 20:58 IST
Radha Ravi

துனுக்குகள்

  • கொலையுதிர் காலம் படத்தில் இவர் நடித்திருக்கிறார்
  • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்
  • இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது
கொலையுதிர் காலம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதா ரவியின் சர்ச்சை பேச்சு பூதாகரமானது. பல்வேறு திரைகலைஞர்கள் அவருடைய பேச்சுக்கு எதிர்பு தெரிவித்தனர். தி.மு.கவில் இருந்து ராதா ரவி தற்காலிகமாக நீக்கப்பட்டார். நயன்தாரா இத்தகைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ராதா ரவியின் இத்தகைய கருத்தும் கண்டனம் தெரிவித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில்,

“மூத்தக்கலைஞரான ராதா ரவி சக திரைக்கலைஞரை கொச்சை படுத்தி பேசியிருப்பது வருத்தம் அளிக்கிறது. இது திரைத்துறை மட்டும் இல்லாமல் பொதுவாழ்விலும் அவருடைய மேன்மையை மதிப்பையும், மரியாதையையும் குறைக்கிறது.  மக்களுக்கு திரைத்துறை மீது இருக்கும் நம்பிக்கையை சீர்அழிக்கிறது. இச்செயலுக்காக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது” என்று அறிக்கை வெளியாகி இருக்கிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்