முகப்புகோலிவுட்

தி.மு.க தலைவருக்கு வாழ்த்து; ராதா ரவிக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா…!!!

  | March 25, 2019 18:13 IST
Radha Ravi Comments Nayanthara

துனுக்குகள்

  • கொலையுதிர் காலம் படத்தில் இவர் நடித்திருக்கிறார்
  • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது
'கொலையுதிர்காலம்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில்  நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மூத்த நடிகர் ராதா ரவி, 'நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்' என பேசியிருந்தார் .

 
ராதாரவியின் இந்த பேச்சு கடும் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில், ராதாரவியின் கருத்துக்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாப்பட்டதுடன், அவருக்கு எதிராக கண்டனங்களும் குவிந்தது. தி.மு.கவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதற்கு நன்றி தெரிவித்தும், ராதா ரவிக்கும் பதிலடி கொடுக்கும் விதத்தில் நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அதில்,

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ராதா ரவி மீது நடவடிக்கை எடுத்ததற்கு திமுக தலைவருக்கு நன்றி. தன்னை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ராதா ரவியை விசாரனைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி விசாகா கமிட்டி அமைக்க நடிகர் சங்கம் நடவடிக்கை  எடுக்குமா? என்னை அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கும் ராதா ரவியும் பெண் வயிற்றில்தான் பிறந்தார். பெண்களை பற்றி இழிவாக பேசுகிறவர்களை பற்றி வருந்துகிறேன். நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் இவ்வாறு கீழ்தறமாக பேசி பிறர் கவனத்தையும் ஈர்க்க முயற்சிக்கிறார் அவர். இது போன்ற கடினமான சூழ்நிலையில் எனக்கு ஆதரவு அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கு நன்றி. என அவர் தெரிவித்திருக்கிறார்
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்