முகப்புகோலிவுட்

“நடிக்கத் தெரியாதவன்தான் கண்ணாடி போட்டு நடிப்பான்” ராதா ரவி மீண்டும் சர்ச்சை பேச்சு

  | April 12, 2019 10:09 IST
Radha Ravi

துனுக்குகள்

  • நயன்தாரா குறித்து ராதா ரவி சமீபத்தில் பேசியிருந்தார்
  • திரைத்துறையை சேர்ந்த பலரும் இவருடைய கருத்துக்கு எதிர்பு தெரிவித்தனர்
  • தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் இவர்
சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘கெலையுதிர் காலம்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ராதா ரவி நயன்தாரா குறிதுது சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவருக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் இந்நிலையில் இன்று சென்னையில் நடந்த குறும்படம் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட பேசியவர் மீண்டும் சர்ச்சைக்குறிய கருத்தை பேசியுள்ளார்.
 
சென்னையில் ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு' என்ற குறும்படம் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு, ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ராதாரவி பேசும் போது, பயம் என்பது எங்களுடைய குடும்பத்திலேயே கிடையாது. எதற்கு பயப்பட வேண்டும்? சிலர் நடிப்பதை நிறுத்திவிடுவோம் என்கிறார்கள். அது முடியாது, நான் நாடகத்தில் நடித்தால் உங்களால் எப்படி நிறுத்த முடியும்.
 
நான் சந்தித்தது ஒரு பிரச்சினையே இல்லை. இதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்பதே கிடையாது. ஏனென்றால் இதெல்லாம் தற்காலிகப் பிரச்சினை. இவர் ஒன்றும் தப்பாக சொல்லவில்லையே என்று சிந்திக்கக்கூடிய அளவுக்கு இது என்ன ஐ.நா. சபை பிரச்சினையா? நம்ம பேசினதில் உண்மை இருக்கா இல்லையா. அவ்வளவுதான். உண்மை என்றவன் ஏத்துக்குட்டு போ, இல்லை என்றவன் விட்டுவிடு” என்றவர் “ கருப்பு கண்ணாடி அணிந்து நடிப்பவனுக்கு நடிக்கவே தெரியாது என்றுதான் அர்த்தம். நான் தைரியமாக சொல்வேன் கண்ணாடி போட்டுக்கொண்டு நடிப்பவன் நடிகனே” கிடையாது என்று பேசியிருக்கிறார்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்