முகப்புகோலிவுட்

ஹீரோவை விட கதைதான் முக்கியம்- ராதிகா ஆப்தே

  | April 19, 2019 08:44 IST
Radhika Apte

துனுக்குகள்

  • கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்
  • இந்தியில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்
  • சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படத்தில் சர்ச்சை காட்சியல் நடித்தார்
தமிழில் கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.  சமீபத்தில் பேசியவர் திரைப்படங்களில் கதாநாகர்களுக்கு கொடுக்கும் சம்பளம் கதாநாயகிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்று கூறியிருக்கிறார்.
 
சமீபத்தில் சினிமா வாழ்க்கை குறித்து அவர் கூறிய அவர்,
 
“சினிமாவில் இப்போது மாற்றங்கள் தெரிகிறது. நல்ல கதைகளுடன் படங்கள் வருகின்றன. ரசிகர்களும் ஒரே மாதிரி படங்களாக இருப்பதை விட வித்தியாசமாக எதிர்பார்க்கிறார்கள்.
 
டிஜிட்டல் யுகத்தில் எல்லாம் மாறிவிட்டது. உலகம் முழுவதும் தயாராகும் அனைத்து படங்களையுமே ரசிகர்கள் பார்க்கிறார்கள். வித்தியாசமான கதைகளை எதிர்பார்ப்பதற்கு அதுவும் காரணம்.நான் நடித்த எல்லா படங்களிலுமே எனக்கு முக்கியத்துவம் இருந்தன. நடிகர்கள்-நடிகைகளுக்கு இடையே சம்பள வித்தியாசம் அதிகம் உள்ளது. வெற்றியடைந்த படங்களின் பெருமை கதாநாயகனைத்தான் போய் சேருகிறது. எவ்வளவு சம்பளம் என்று முடிவு செய்வது நடிகைகள் கையில் இல்லை.
 
சம்பள விகிதத்தை தீர்மானிக்க நிறைய காரணங்கள் இருக்கிறது. ஆனால் கதாநாயகன் அளவுக்கு கதாநாயகிகளுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்பது மட்டும் நிஜம். நட்சத்திர அந்தஸ்துள்ள படங்களுக்கு ஓப்பனிங் பெரிய அளவில் இருக்கும். ஆனால் கதை வித்தியாசமாக இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய நடிகர்கள் படமாக இருந்தாலும் தோல்வி அடைந்து விடும்.
 
சிறிய நடிகர் நடிகைகள் படங்களை கூட, ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்கிறார்கள். எனவே படத்தில் நடிகர்களை விட கதைதான் முக்கியம்.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்