முகப்புகோலிவுட்

ரஜினி பட நாயகிக்கு 8 ஆண்டுக்கு முன்னாடியே திருமணம் நடந்துவிட்டதாம்….!

  | February 08, 2019 16:11 IST
Radhika Apte

துனுக்குகள்

  • கபாலி படத்தில் இவர் நடித்திருந்தார்
  • தோனி படத்திலும் நடித்திருந்தார் இவர்
  • 8 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டார்
தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான  கபாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் ராதிகா ஆப்தே.
 
அதன் பின் தோனி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மிகவும் தைரியமான துணிச்சலான நடிகையும் கூட. தன்னுடைய கருத்துகளை நேர்மையான முறையில் பதிவு செய்யக்கூடியவர். ஆடை அணிவது, திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பது பற்றிய விமர்சனங்களுக்கு சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இவர் தற்போது லண்டனை சேர்ந்த இசைகலைஞர் பெனடியை  திருமணம் செய்துகொண்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
 
இந்த திருமண வாழ்க்கை குறித்து ராதிகா ஆப்தே அளித்த பேட்டி ஒன்றில் ,
 
“நாங்கள் 8 வருடங்களுக்கு முன்பே காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டோம். ஆனால் பலருக்கு நாங்கள் திருமணம் செய்துகொண்டது தெரியாது. எங்களுடைய குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானது. கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பதுதான் குடும்ப வாழ்க்கை.
 
நானும், எனது கணவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்திருக்கிறோம். அவ்வப்போது எங்களுக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. ஆனாலும் அவை சிறிது நேரம்தான் இருக்கும். சில நிமிடங்களிலேயே இருவரும் பேசிவிடுவோம்.
 
யார் மீது தவறு இருந்தாலும் இருவருமே மன்னிப்பு கேட்டுக்கொள்வோம். கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டு நீண்ட நாட்கள் பேசாமல் இருந்தால்தான் பிரச்சனை. சண்டையை மனதில் வைத்துக் கொள்ளாமல் மறந்துவிடுவோம். எனக்கும், எனது கணவருக்கும் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. நீ என்னை மதிக்கவில்லை. முக்கியத்துவம் தரவில்லை என்றெல்லாம் ஒருமுறை கூட சொன்னது இல்லை.” இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்