முகப்புகோலிவுட்

“ஜெயிக்கிற வரைக்கும் விளையாட போறேன்” சித்திரம் பேசுதடி ட்ரைலர் வெளியானது…..

  | February 14, 2019 13:16 IST
Radhika Apte

துனுக்குகள்

 • இந்த படத்தை ராஜன் மாதவ் இயக்கியிருக்கிறார்
 • எஸ்.என். எழிலன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்
 • கபாலி படத்திற்கு பிறகு ராதிகா ஆப்தே இப்படத்தில் நடித்திருக்கிறார்
இயக்குநர் ராஜன் மாதவ் இயக்கத்தில், எஸ்.என். எழிலன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சித்திரம் பேசுதடி 2'. இப்படத்தில் நடிகர்கள் விதார்த், அஜ்மல் அமீர், அசோக், நிவாஸ் ஆதித்தன் மற்றும் நடிகைகள் காயத்ரி, ராதிகா ஆப்தே, நிவேதிதா ஆகியோர் நடித்துள்ளனர்.    இப்படத்தில் நந்தன் மற்றும் நடிகை பிரியா பானர்ஜி ஆகியோர் அறிமுகமாகின்றனர். சாஜன் மாதவ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
 
48 மணிநேரங்களில் நடக்கும் நான்கு வெவ்வேறு கதைகளின் இணைப்பு தான் இப்படத்தின் கதைக்களம். 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்திற்கு இந்த படத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
 
இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி சக்க போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
 
“ இந்த ட்ரைலரின் தொடக்கமே ஒரு பெரிய எதிர்பார்ப்போடு தொடங்குகிறது. அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மிரளவைக்கிறது.
புதுவிதமான கதாபாத்திரத்தில் நடிகை காயத்ரியும், ராதிகா ஆப்தேவும் இடம் பெற்றிருக்கிறார்கள்.  தமிழில் ரஜினி நடிப்பில் உருவான கபாலி திரைப்படத்திற்கு பிறகு ராதிகா ஆப்தே இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
 
ஏற்கனவே அறிவித்திருப்பது போலவே நான்கு பேரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் எப்படி ஒரே கோட்டில் இணைக்கிறது என்பதுதான் கதையாக இருக்கும் என்பதை ட்ரைலர் உணர்த்துகிறது.
 
வெறி கொண்டு விளையாடும் முரட்டு விளையாட்டாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாஜன் மாதவின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. இந்த ட்ரைலரில் உள்ள விறுவிறுப்பு படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com