முகப்புகோலிவுட்

வைரலாகும் ராதிகா ஆப்தே க்ளாமர் போட்டோஸ்!!

  | February 27, 2019 14:43 IST
Radhika Apte

துனுக்குகள்

  • ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானால் ராதிகா ஆப்தே.
  • லஸ்ட் ஸ்ரோரிஸ் படத்தில் கவர்ச்சியாக நடித்திருப்பார்.
  • சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் “ஆல் இன் ஆல் அழகுராஜா” படத்தில் அறிமுகமாகியவர் ராதிகா ஆப்தே.  இப்படத்தை தொடர்ந்து “வெற்றி செல்வன்” என்ற படத்தில் நடித்திருந்தார்.  ஆனால் இந்த இரண்டு படங்களுமே ராதிகா ஆப்தேவிற்கு பெரியளவில் கைக்கொடுக்கவில்லை.  அதன் பின், பா. இரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.  உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட ரஜினியுடன் நடித்ததால் இவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 
 
தமிழ் தவிர மராத்தி, தெலுங்கு, இந்தி, பெங்காலி போன்ற மொழி படங்களில் ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ”பார்ச்டு”, “லஸ்ட் ஸ்டோரிஸ்”, “பர்ஷத்” போன்ற இந்தி படங்களே இவருக்கான ஹைப் கொடுத்தது.  இப்படங்களில் மிகவும் போல்டான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.  கதாபாத்திரத்திற்கு கவர்ச்சி முக்கியமென்றால் முழுமையாக இறங்கி நடிக்கக்கூடியவர் நடிகை ராதிகா. 
 
ஒவ்வொரு முறையும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியிலும் கவர்ச்சி குறித்து இவர் பேச்சுக்கள் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.  ராதிகா ஆப்தேவிற்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும், நடிப்பில் இவர் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை.  அவ்வப்போது, கவர்ச்சியான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் இவர் பதிவிடுவது வழக்கம்.  சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் படுகவர்ச்சியாக இருந்ததோடு மட்டுமல்லாமல், இரண்டு லட்ச லைக்குகளை அள்ளியிருக்கிறது. 
 
சினிமா துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கு போட்டியாகவே இருக்கிறார் ராதிகா ஆப்தே.  இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.   
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்