முகப்புகோலிவுட்

எம்.ஆர். ராதாவின் 41-ஆம் ஆண்டு நினைவு நாள்; தந்தையுடனான B&W புகைப்படத்தை பகிர்ந்த ராதிகா..

  | September 18, 2020 15:12 IST
Radhika

அவர் 17, செப்டம்பர் 1979-ல் மரணமடைந்தார். இன்று அவருடைய 41-ஆம் ஆண்டு நினைவு நாளாகும்.

நடிகை ராதிகா சரத்குமார் தனது தந்தை எம்.ஆர். ராதாவின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றி  நினைவு கூர்ந்துள்ளார். அவர் தனது தந்தையுடன் ஒரு அழகான பிளாக் & ஒயிட் த்ரோபேக் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

புகைப்படத்தில் ராதிகா ஒரு சிறுமியாகக் காணப்படுகிறார். அவர் தனது ட்விட்டர் பதிவில் "எப்போதும் நம்முடைய இதயங்களில் இருப்பதோடு, எனது படைப்பிலும் பிரதிபலிக்கிறார். அவரது நினைவு நாளின் அவரைப் பற்றிய எனது எண்ணங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

‘நடிகவேள்' எம்.ஆர்.ராதா 14 ஏப்ரல் 1907-ஆம் ஆண்டு பிறந்தார். ஒரு பிரபலமான நடிகராகவும், வெற்றிகரமான நாடகக் கலைஞராகவும் இருந்தார். ரத்தக் கண்ணீர், நல்ல இடத்து சம்பந்தம், உலகம் சிரிக்கிறது, தாமரை குலம், பாகப்பிரிவினை, ஆடவந்த தெய்வம், பாவ மன்னிப்பு, தாய் சொல்லை தட்டாதே, பலே பாண்டியா,ஆலயமணி என பல பல படங்களில் நடித்துள்ளார். நாடகக் கலைஞராக இருந்த இவர் 5,000 நிகழ்ச்சிகளுக்கு மேல் செய்துள்ளார். அவர் 17, செப்டம்பர் 1979-ல் மரணமடைந்தார். இன்று அவருடைய 41-ஆம் ஆண்டு நினைவு நாளாகும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com