முகப்புகோலிவுட்

‘தளபதி’ விஜயின் ‘வெறித்தனம்’ பாடலுக்கு ஆடிய 'லிட்டில் சுப்ரீம் ஸ்டார்'..!

  | August 20, 2020 21:18 IST
Verithanam

நடிகை ராதிகா, சமீபத்தில் திரையுலகில் 45 ஆண்டுகள் நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராதிகா சரத்குமாரின் மகன் ராகுலின் நடனம் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது, இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. விஜய்யின் ‘பிகில்' படத்தில் பிரபலமான 'வெறித்தனம்' பாடலுக்கு இளம் நட்சத்திரக் குழந்தை தனது கூலான நடன நகர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

‘ஆஸ்கர் நாயகன்' ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, தளபதி விஜய் இப்பாடலைப் பாடியுள்ளார். ராதிகா சரத்குமாரின் மகன் ராகுலுக்கு வயது 16 ஆகிறது. இப்போதே மக்களின் கவனத்தை மெதுவாகப் பிடிக்கத் தொடங்கியுள்ளார். அவர் சமூக ஊடகங்களில் அதிகம் செயல்படவில்லை என்றாலும், ராகுல் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். அவர் தனது பெற்றோரின் பாதையைப் பின்பற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ராகுல் சரத்குமார் தனது 16வது பிறந்த நாளை ஜூன் மாதம் கொண்டாடினார். இந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, ராதிகா தனது மகனுடன் ஒரு அருமையான படத்தை ஒரு இதயப்பூர்வமான செய்தியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள திறமையான நடிகை ராதிகா, சமீபத்தில் திரையுலகில் 45 ஆண்டுகள் நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com