முகப்புகோலிவுட்

“பொறுமையாக இருங்கள்”ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள்

  | April 26, 2019 16:21 IST
Raghava Lawrence

துனுக்குகள்

  • காஞ்சனா 3 திரைப்படம் இந்தியில் தயாராகிறது
  • ராகவா லாரன்ஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • தமிழ்ல் வெளியான காஞ்சனா படத்தில் ஓவியா, வேதிகா நடித்திருந்தனர்
காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
 
என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்.
 
என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன்...அப்படி எதுவும் செய்யாதீர்கள்..பொறுமையை கடை பிடியுங்கள்...

நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம்..நல்லதை யே செய்வோம்..அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்..
 
எனக்கு ஒரு  சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நான் மும்பையில்  காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம்..அது வரை அமைதி காப்போம். கடவுள் நமக்கான நல்லதை செய்வார்.
 
நமக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம். நம்மை பற்றி  புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்கட்டும்.
 
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்