முகப்புகோலிவுட்

“கால்ல விழுந்து கேக்குறேன் கண்ணா” ராகவா லார்ன்ஸ் இவ்ளோ கெஞ்சி என்ன கேட்குறாரு தெரியுமா..?

  | March 26, 2020 13:09 IST
Corona Lockdown Awareness

ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா திரைப்படத்தை அக்‌ஷய் குமாரை வைத்து ‘லக்ஷ்மி பாம்’ என்ற பெயரில் பாலிவுட்டில் இயக்கிவருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தவிர்ப்பதற்காகவும், சங்கிலியை உடைப்பதற்காகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்திருந்தார். அதையடுத்து, கோலிவுட் பிரபலங்கள் விழிப்புணர்வை பரப்புவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர், மேலும் அவர்கள் இந்த ஊரடங்கின் முக்கியத்துவம் குறித்து அவ்வப்போது வீடியோ வெளியிட்டு விழிபுணர்வு எற்படுத்துவதன் மூலம், சூழ்நிலை குறித்து அவர்களின் ரசிகர்கள் இன்னும் சற்று அதிகமாகவே புரிந்துகொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் காலில் விழுந்து கெஞ்சி கேட்டுக்கொள்வதாக ஒரு சுவார்ஸ்யமான கொரோனா விழிப்புணர்வு வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் மற்றொரு நபர், தனக்கு 21 நாட்கள் விடுமுறை அளித்துள்ளதாகவும், அதனால் ஜாலியாக தன் அப்பா அம்மாவைப் பார்க்க ஊருக்கு செல்வதாக கூறுகிறார். அவரைக் கூப்பிட்ட ராகவா லாரன்ஸ் “இது என்ன பொங்கல், தீபாவளி பண்டிகைன்னு நெனச்சியா, நீ அப்பா-அம்மா கூட சந்தோஷம் இருக்கப் போகல, அவங்களை சாவடிக்க போற. அதானல, நீ இங்கயே வீட்ல இரு, அப்பா அம்மா அங்க இருக்கட்டும். இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் வீட்டுக்கு போய் ஒன்னா எவ்ளோ வெனும்னாலும் சந்தோஷமா இரு, உன் கால்ல விழுந்து கேட்டுக்குறன், வெளிய போகாத” என்று கூறுகிறார். பிறகு நம் பக்கம் திரும்பி “யாரும் வெளிய போகாதீங்க ப்ளீஸ்,பாய்” என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது செம வைரலாகப் பறவிவருகிறது. ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா திரைப்படத்தை அக்‌ஷய் குமாரை வைத்து ‘லக்ஷ்மி பாம்' என்ற பெயரில் பாலிவுட்டில் இயக்கிவருகிறார். இதுவே அவருக்கு பாலிவுட்டில் அறிமுகத் திரைப்படமாகும். அதையடுத்த அவர் ரஜினியின் ‘தலைவர்170' திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்