முகப்புகோலிவுட்

STR குரலில் மிரட்டும் சூப்பர் ஸ்டார் ஆன்தம் - தெலுங்கு versionனை வெளியிட்ட ராகவா..!!

  | July 05, 2020 08:08 IST
Super Star Anthem

துனுக்குகள்

 • இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பஜ்ஜி என்று அனைவரும்
 • இந்த படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா
 • தற்போது இந்த பாடலின் தெலுங்கு versionனை வெளியிட்டுள்ளார்
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பஜ்ஜி என்று அனைவரும் செல்லமாக அழைக்கும் ஹர்பஜன் சிங் அவர்களும் தற்போது திரையுலகில் ஹீரோவாக களமிறங்கியுள்ள திரைப்படம்  ‘Friendship'. இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சதிஷ் இணைந்துள்ளார். மேலும் படத்தின் கூடுதல் பலமாகப் பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலை நேற்று மாலை நடிகர்-இயக்குநர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். பிரண்ட்ஷிப் படத்தின் First Single பாடல் ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துக்கு சமர்பிக்கும் விதமாக ‘சூப்பர் ஸ்டார் ஆன்தம்' என வெளியாகியுள்ளது. இப்பாடலை டி.எம். உதயகுமார் இசையமைக்க, ஆர். கவுதம் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.
‘லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்று முன்னதாக அழைக்கப்பட்டு வந்த நடிகர் சிலம்பரசன் குரலில் இந்த பாடல் தற்போது இணையத்தில் செம வைரலாகிவருகிறது. தற்போது இந்த பாடலின் தெலுங்கு versionனை வெளியிட்டுள்ளார் ராகவா லாரண்ஸ்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com