முகப்புகோலிவுட்

"மதியாதார் தலைவாசல் மிதியாதே" காஞ்சனா இந்தி ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்

  | May 20, 2019 14:21 IST
Kanchana

துனுக்குகள்

  • இப்படத்தை தமிழில் லாரன்ஸ் இயக்கி இருந்தார்
  • இந்தியிலும் இப்படத்தை இவரே இயக்குவதாக இருந்தது
  • தற்போது அதிரடியாக இப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார் இவர்
ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்திற்கான வேலைகள் நடைபெறுவதாகவும் தெறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அக்ஷய் குமார், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பதாக உறுதியானது. இந்த படத்தை லாரன்ஸே இயக்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது.  இந்நிலையில் தனக்கு இந்தி திரையுலகம் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று இந்த படத்தில் இருந்து விலகுவதாக நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
 
 
தமிழில் லாரன்ஸ் நடித்த வேடத்தில் அக்ஷய் குமாரும், சரத்குமார் நடித்த வேடத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. படத்தின் ரீமேக் உரிமம் இன்னும் கையெழுத்து ஆகாத நிலையில் லாரன்சுக்கு  தெரியாமல் "லக்ஷ்மி" என்ற பெயரில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனை கதாநாயகி கியாரே அத்வானிக்கும் பகிர்ந்திருந்தார்.  
 
தனக்கு தெரியாமல் இப்படி ஒரு போஸ்டர் வெளியானதைக் கண்ட அதிர்ச்சி அடைந்துள்ளார் ராகவா லாரன்ஸ். மேலும் இந்த போஸ்டரில் ராகவா லாரன்ஸ் பெயர் இடம் பெறவில்லை.
 
இதற்கு பதில் செல்லும் விதத்தில் இயக்குநர் ராகவா லாரன்ஸ், மதியாதார் தலைவாசல் மிதியாதே  என்கிற பழமொழியை சுட்டிக்காட்டி காஞ்சனா இந்தி ரீமேக்கில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
 
இந்தி திரையுலகில் மற்ற இயக்குநர்களை எப்படி நடத்துகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. என்னை இப்படித்தான் நடத்துகிறார்கள். என்று வருத்தத்துடன் பதிவு செய்திருகிறார் இயக்குநர் லாரன்ஸ்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்