முகப்புகோலிவுட்

10 நாளில் 130 கோடி வசூலில் மிரட்டும் காஞ்சனா 3

  | April 29, 2019 16:18 IST
Kanchana 3

துனுக்குகள்

 • இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி இருந்தார்
 • ஓவியா, வேதிகா இப்படத்தில் நடித்திருந்தனர்
 • தமிழில் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இந்தியில் இப்படம் உருவாகிறது
 
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த 19ம்  தேதி வெளியான காஞ்சனா 3 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸுடன் வேதிகா, ஓவியா, கோவை சரளா இன்னும் பலர் நடித்திருந்தனர்.
 
திகில் நிறைந்த காமெடி படமாக உருவாகி இருந்த இப்படம் திரைக்கு வந்த நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் இப்படம் வெளியிடப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில் 130 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது இப்படம்.
 
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டு இருந்தது இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்தியில் இப்படத்தை இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com