முகப்புகோலிவுட்

அழகிய பேயாக வரும் ராய் லக்ஷ்மி - ‘சிண்ட்ரெல்லா’ ரிலீஸ் அறிவிப்பு..!

  | February 14, 2020 12:29 IST
Cinderella

இப்படத்தில் சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர், ஆடுகளம் நரேன், மாமதி சாரி, கல்லூரி வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராய் லக்ஷ்மி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘சிண்ட்ரெல்லா' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ராய் லக்ஷ்மி நடிப்பில் வினோ வெங்கடேஷ் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘சிண்ட்ரெல்லா'. இப்படத்தில் சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர், ஆடுகளம் நரேன், மாமதி சாரி, கல்லூரி வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திகில்-திரில்லர்-கற்பனை கதைக் களத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை SSi productions தயாரித்துள்ளது. இப்படத்துக்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார். ராம்மி இப்படத்திற்கான கேமரா வேலைகளை கவனிக்க லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவலை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் அடுத்த மாதம் (மார்ச்) வெளியாவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் தேதி குறிப்பிடப்படாத நிலையில், இது குறித்த அதிகாரப்புர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்