முகப்புகோலிவுட்

பள்ளிப் பருவ ரைசாவைப் பாருங்க.! வைரலாகும் த்ரோபேக் புகைப்படம்!

  | May 05, 2020 15:17 IST
Raiza Wilson

ரைசா வில்சன் தற்போது ‘ஆலிஸ்', ‘காதலிக்க யாருமில்லை', 'எஃப்.ஐ.ஆர்' மற்றும் 'ஹேஷ்டேக் லவ்' ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் - சீசன் 1 என்ற ஹிட் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றதன் மூலம், நடிகையும் மாடலுமான ரைசா வில்சன் தமிழ் பார்வையாளர்களிடையே தனது அடையாளத்தைப் பதித்தார். பிக் பாஸை அடுத்து, ரைசா 2018-ஆம் ஆண்டு ‘பியார் பிரேமா காதல்' திரைப்படத்தில் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். அப்படத்தில் சக பிக்பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார். எலன் இயக்கிய அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றது. முன்னதாக, அவர் தனுஷின் வி.ஐ.பி-2 படத்தில் கஜோலுடன் சிறிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பூட்டப்பட்டுள்ள நிலையில், சோஷியல் மீடியாவில் சூப்பர் ஆக்டிவாக இருக்கும் இளம் நடிகை எப்போதும் தனது அதிர்ச்சி தரும் படங்களால் தன்னைப் பின் தொடர்பவர்களை திகைக்க வைக்கிறார்.

அந்த வகையில், தற்போது நடிகை ரைசா வில்சன் தனது பள்ளி நாட்களில் எடுக்கப்பட்ட ஒரு த்ரோபேக் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், அவர் பள்ளியில் தனது ஆசிரியர்களில் ஒருவரிடமிருந்து விருது ஒன்றை பெறுகிறார். பூட்டுதலின் போது பல நடிகர்கள் தங்கள் பழைய புகைப்படங்கள் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ரைசா முன்னதாக அவரது தந்தை மற்றும் தாயின் புகைப்படம் மற்றும் படப்பிடிப்புத் தளங்களில் எடுக்கப்பட்ட பல புகைக்கப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார்.

ரைசா வில்சன் தற்போது ‘ஆலிஸ்', ‘காதலிக்க யாருமில்லை', 'எஃப்.ஐ.ஆர்' மற்றும் 'ஹேஷ்டேக் லவ்' ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com