முகப்புகோலிவுட்

ராஜ மவுலியின் RRR – பட பிடிப்பின் போதே படைத்த புதிய சாதனை

  | February 09, 2020 13:27 IST
Rajamouli  Baahubali

படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத நிலையில், அந்த திரைப்படம் சுமார் 830 கோடி ரூபாயையை கடந்து வர்த்தகம் செய்து உள்ளது.

துனுக்குகள்

  • ராஜ மவுலியின் ஆர்.ஆர்.ஆர் – பட பிடிப்பின் போதே படைத்த புதிய சாதனை
  • இந்த படத்தின் இரண்டு பாகங்களும் வியாபார ரீதியா நல்ல வசூல் கண்டது.
  • நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பது படத்திற்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது
ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், ரானா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா மற்றும் தம்மன்னா என்று ஒரு நடிகர் பட்டாளமே நடித்து, இந்தியா சினிமா வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்த திரைப்படம் தான் பாகுபலி. இந்த படத்தின் இரண்டு பாகங்களும் வியாபார ரீதியாக நல்ல வசூல் கண்டது.

தற்போது அந்த திரைப்படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிவரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத நிலையில், அந்த திரைப்படம் சுமார் 830 கோடி ரூபாயை கடந்து வர்த்தகம் செய்துள்ளது.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்து வரும் இந்தத் திரைப்படம், இன்றுவரை RRR என்று அழைக்கப்பட்டு வருகிறது. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள இந்த திரைப்படம் மேலும் பல வர்த்தக சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராம் சரண் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் பிரம்மாண்டமான  திரைப்படம் இது என்பதால் ராம் சரண் ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர். இந்த படத்தில் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பது படத்திற்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்