முகப்புகோலிவுட்

அஜித்தின் ‘வலிமை’ படத்தில் இணைகிறாரா ‘ராஜா ராணி’ நாயகி?

  | October 22, 2019 12:26 IST
Ajith

துனுக்குகள்

  • அஜித்தின் 60வது படமாக வலிமை உருவாகிறது
  • இப்படத்தில் போனிகபூரின் மகள் ஜான்விகபூர் நடிக்கவிருக்கிறார்?
  • அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது
‘நேர்கொண்ட பார்வை' படத்தின்  வெற்றிக்கு பிறகு அஜித்குமார், மீண்டும்  இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் இணைந்துள்ளார் இந்த படத்திற்கு ‘வலிமை' என்று தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் ‘வலிமை' பட பூஜை எளிமையாக நடைபெற்றது.
 
இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளுக்கு இப்படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்திருந்தார். படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் ‘வலிமை' படத்தில் நஸ்ரியா நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ‘நேரம்', ‘ராஜா ராணி', ‘நய்யாண்டி', ‘திருமணம் எனும் நிக்கா' ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அதில் வலிமை என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார். இதன் மூலம் அஜித் படத்தில் அவர் நடிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்