முகப்புகோலிவுட்

'ராஜமௌலியின் RRR அப்டேட்' - இன்று வெளியாகும் டைட்டில் லோகோ மற்றும் மோஷன் போஸ்டர்

  | March 25, 2020 13:47 IST
Rrr

துனுக்குகள்

 • ரசிகர்கள் பேனர் வைப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடாமல் வீட்டில்
 • டைட்டில் லோகோ மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகும்
 • இந்நிலையில் இந்த படம் குறித்த அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில்
ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், ரானா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா மற்றும் தமன்னா என்று ஒரு நடிகர் பட்டாளமே நடித்து, இந்தியா சினிமா வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்த திரைப்படம் தான் பாகுபலி. இந்த படத்தின் இரண்டு பாகங்களும் வியாபார ரீதியாக நல்ல வசூல் கண்டது.

தற்போது அந்த திரைப்படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிவரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், சில வாரங்களுக்கு முன்பு அந்த திரைப்படம் சுமார் 830 கோடி ரூபாயைக் கடந்து வர்த்தகம் செய்துள்ளது.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்து வரும் இந்தத் திரைப்படம், இன்றுவரை RRR என்று அழைக்கப்பட்டு வருகிறது. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள இந்த திரைப்படம் மேலும் பல வர்த்தக சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த அப்டேட் ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த படத்தின் இயக்குநர் ராஜமௌலி. 
இன்று இந்த படத்தில் டைட்டில் லோகோ மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது நிலவி வரும் இந்த அசாதாரண சூழ்நிலையில் இந்த வெளியீடு எந்த நேரத்தில் நடக்கும் என்பது சொல்வது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பேனர் வைப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடாமல் வீட்டில் பாத்திரமாக இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com