முகப்புகோலிவுட்

ரஜினி - கமல் பட நடிகர் மருத்துவமனையில் கவலைக்கிடம்..! அதிர்ச்சியில் திரையுலகம்...

  | November 08, 2019 15:25 IST
Thennavan

துனுக்குகள்

  • தென்னவன், பாரதிராஜாவின் ‘என் உயிர் தோழன்’ படத்தில் அறிமுகமானார்.
  • இவர் கமல் ஹாசனுடன் இணைந்து விருமாண்டி படத்தில் நடித்துள்ளார்.
  • இவர் ரஜினியின் பேட்ட படத்திலும் நடித்துள்ளார்.
பிரபல குனச்சித்திர நடிகர் தென்னவன் மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.

தென்னவன் 1990-ஆம் ஆண்டு பாரதிராஜாவின்  இயக்கத்தில்‘என் உயிர் தோழன்' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குனச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவர் கமல்ஹாசனின் ‘விருமாண்டி', ரஜினியின் ‘பேட்ட' படத்திலும் நடித்துள்ளார். மேலும் ஜெமினி, ஜே ஜே, சண்டக்கோழி, சுந்தர பாண்டியன், வாகை சூடவா, ஜிகர்தண்டா ஆகியவை இவர் நடித்த படங்களில் முக்கியமானவையாகும்.

ஒரு சில படங்கள் மற்றும் சன் தொலைக்காட்சியில் ‘ராசாத்தி' எனும் சீரியலிலும் நடித்துகொண்டிருக்கும் இவர் தற்போது மூளை முடக்கத்தால் (Brain paralysis)
பாதிக்கப்பட்டு பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கமல் ஹாசன் பிறந்தநாள் மற்றும் 60 ஆண்டு கால சினிமா வாழ்க்கை நிறைவு கொண்டாட்டம், இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் உருவச்சிலை திறப்பு, ரஜினியின் தர்பார் பட மோஷன் போஸ்டர் ரிலீஸ் என பல மகிழ்ச்சியான தருனங்களை கொண்டாடிவரும் நிலையில் குனச்சித்திர நடிகர் தென்னவன் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்கு உறியதாகப் பார்க்கப்படுகிறது.

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்