முகப்புகோலிவுட்

ரஜினியுடன் மோதும் கார்த்தி-விஷால்‼

  | September 27, 2019 15:33 IST
Rajinikanth

துனுக்குகள்

  • ஜீத்து ஜோசப் இயக்கும் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது
  • தர்பார் படத்துடன் தீபாவளிக்கு இரண்டு படங்கள் மோதுகின்றன
  • தர்பார் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது

 இந்தாண்டு பேட்ட படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பை விரைவில் முடித்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளங்களில் இருந்து புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இயக்குநர் முருகதாஸ் பணியாளர்களுக்கு கட்டுபாடுகளை விதித்துள்ளார். 
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க யோகி பாபு, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்து வருகிறார்கள். இதனிடையே கார்த்தி, ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி வரும் படமும் வரும் பொங்கலன்று திரையிட திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், விஷால் நடித்து வரும் 'விஷால் 28' திரைப்படமும் 2020ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு   பொங்கல் அன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படமும் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் "விஸ்வாசம்" படமும் வெளியாகின. இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக வனிக ரீதியாகவும் சினிமாவிற்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. அடுத்த ஆண்டு மூன்று படங்கள் வரும் என்கின்ற நிலையில் அடுத்த ஆண்டும் சினினாவிற்கு சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்