முகப்புகோலிவுட்

தர்பார் திருவிழா! வைரலாகும் ரஜினிகாந்தின் டப்பிங் ஸ்டில்ஸ்..!!

  | November 14, 2019 21:54 IST
Thalaivar 167

துனுக்குகள்

  • தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக்வுள்ளது.
  • இப்படத்தின் டப்பிங் வேலைகள் நடந்துவருகிறது.
  • இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
தர்பார் படத்துக்கு டப்பிங் பேசும் ரஜினிகாந்தின் புகைப்படங்களை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

ரஜினி படம் என்றாலே உலகம் முழுக்க எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும் படம் திரைக்கு வருவதற்குள், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டைம் தேடி பிடித்து தெரிந்துகொள்வதற்கு ரசிகர்கள் எந்த நேரத்திலும் இணையத்தில் பின் தொடர்ந்துகொண்டே இருப்பார்கள்.

பேட்ட பட வெற்றிக்கு பின், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தயாரகியுள்ள படம் ‘தர்பார்'. இப்படத்தை லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு இணையாக ‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இதில், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் கமல்ஹாசன் பிறந்தநாலன்று, தர்பாரின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில், முன்னனி ஸ்டார்களான கமல், மஹேஷ் பாபு, மோஹன் லால் மற்றும் சல்மான் கான் ஆகியோரால் ஒரே நேரத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. வெளியான நிமிடத்திலிருந்து யூடியூபில் இன்று வரை ட்ரேம்டிங் லிஸ்டில் உள்ளது இந்த மோஷன் போஸ்டர். அனிருத்தின் மிரட்டலான இசையில், ஆதித்யா அருணாசலம் என்ற பெயருடன் ரஜினிகாந்தி மாஸாக வரும் மோஷன் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில், பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தின் டப்பிங் வேளைகள் தொடங்கியுள்ளது. ஆதித்யா அருணாசலத்தின் கதாப்பாத்திரத்துக்கு ரஜினி டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருகிறார். அவர் ஸ்டைலாக உட்கார்ந்து டப்பிங் செய்யும் அந்த புகைப்படங்களை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. உலகம் முழுக்க இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இதை பார்த்துவிட்டு சும்மா இருப்பார்களா..? அந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கி கொண்டாடிவருகின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்