முகப்புகோலிவுட்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்கிய ரஜினி! வைரல் போட்டோஸ்!

  | October 21, 2019 14:29 IST
Rajinikanth

துனுக்குகள்

 • 10பேருக்கு வீடு கட்டி கொடுத்திருக்கிறார் ரஜினி
 • தற்போது ரஜினிகாந்த் தர்பார் படத்தை முடித்துள்ளார்
 • அடுத்து சிவாவின் படத்தில் நடிக்கவிருக்கிறார் இவர்
கடந்த ஆண்டு தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்!
 
கடந்த ஆண்டு கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. சிலரது வீடுகள் முற்றிலும் சிதைந்து விழுந்தன. தமிழகம் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வந்து சேர்ந்தது.
 
அவ்வகையில், கஜா புயலால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வீடுகளை கட்டித் தர நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என ரஜினிகாந்த் தனது ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.
 
அதன்படி நாகை மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை வழங்கினார். பயனாளர்களை இன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்து, வீடுகளுக்கான சாவியை ரஜினிகாந்த் வழங்கினார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com