முகப்புகோலிவுட்

ரஜினி, விஜயை வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன்.! கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

  | July 13, 2020 23:39 IST
Rajinikanth

"மலையாளிகள், கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி, ஒரு தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள்"

மாடல் அழகியும் - நடிகையுமாக மீரா மிதுன் ‘8 தோட்டாக்கள், ‘தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் போதை ஏறி புத்தி மாறி' போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் ‘உலக நாயகன்' கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் - 3' நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்து அவர் மிகவும் பிரபலமானார்.

எப்போதும் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மீரா மிதுன், பல சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் தன்னை வெளிப்படித்திக்கொண்டே இருக்கிறார். சமீபத்தில் நடிகை த்ரிஷாவை எச்சரித்து ஒரு பதிவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

அடிக்கடி, தமிழக முதலமைச்சர், நாட்டின் பிரதமர் என பலரையும் தன் ட்வீட்டுகளில் பெயர்களி இழுத்து விடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

கமல்ஹாசன், த்ரிஷா மற்றும் பலரை இழுத்த பிறகு, இப்போது மீரா மிதுன், கோலிவுட் தன்னை புறக்கணித்ததால், அவர் ஹாலிவுட்டில் இருப்பதாக ட்வீட் செய்துள்ளார் என்றும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோர் அவதூறு செய்ய முயற்சிக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பதாகவும் கூறி ட்வீட் செய்து புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளார். வழக்கம் போல கடுப்பான நெட்டிசன்கள் அவரது ட்வீட்டுக்கு கமண்ட் செய்து வருகின்றனர். 

மீரா மிதூனின் ட்வீட்டுகளில் “தமிழ்நாடு என்னை புறக்கணித்தது, அதற்கு நன்றி, அதனால் தான் இபோது தேசிய அளவில், சர்வதேச அளவில் ஒரு சூப்பர்மாடலாக இருக்கிறேன். பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நான் இருக்கிறேன். ஆனால் எனக்கு புரியாதது என்னவென்றால், தமிழ்நாடு என்னைப் பற்றி பேசுவது (துன்புறுத்துவது) அவர்களின் ஒரே வேலையாக வைத்துள்ளது?!” என்றும் “தமிழ்நாடு தமிழர்களுக்கான, இந்துக்களுக்கானது என நான் கருதுகிறேன், ஆனால் மலையாளிகள், கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி, ஒரு தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள். மதுரையை எரித்த கண்ணகி போல, எனக்கு கோபம் வரும்போது நான் தமிழ்நாடையும் அப்படிசெய்வேன்! பிரதமர் மோடி தமிழ்நாட்டை அழித்துவிடுங்கள்!” என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும் “தமிழ்நாடு இறந்து கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் (கன்னடம்), விஜய் (கிறிஸ்தவர்) என்னை அவதூறு செய்கிறார்களா?! சைபர் மிரட்டல் பெண் துன்புறுத்தல் சட்டத்தில் அதை சட்டப்பூர்வமாக எடுக்க நான் தயங்க மாட்டேன்! கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று பதிவிட்டு, பலரையும் கடுபேற்றியுள்ளார் என்பது அந்த பதிவிற்கு கீழ் வந்துள்ள கமண்ட்களில் தெரிகிறது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com