முகப்புகோலிவுட்

ரஜினியின் ‘தர்பார்’ படப் பாடல்கள் இன்று வெளியீடு..!

  | December 07, 2019 11:43 IST
Darbar

துனுக்குகள்

  • தர்பார் திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக்வுள்ளது.
  • இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
  • லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினியின் தர்பார் பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறவுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்'. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

லைக்கா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இப்படத்லிருந்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய ரஜினியின் அறிமுகப் பாடலான ‘சும்மா கிழி' முதல் சிங்கிள் ட்ராக்காக சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
2020 பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 9-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீடு விழா இன்று மாலை நடைபெறவுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி துவங்கப்படுகிறது. பேட்ட படத்திற்குப் பிறகு அனிருத் இரண்டாவது முறையாக ரஜினிகாந்துக்கு இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com