முகப்புகோலிவுட்

“மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி” மோடி புகழ் பாடிய ரஜினி

  | May 28, 2019 17:40 IST
Rajini

துனுக்குகள்

  • ரஜினி தர்பார் படத்தில் நடித்து வருகிறார்
  • இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்
  • மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ரஜினி
பேட்ட படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்' படத்திவ் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
 
தேசிய கட்சிகளாகட்டும், மாநிலக்கட்சிகளாகட்டும் அதன் தலைமையை வைத்துதான் அந்த கட்சி வெற்றியை பெறுகிறது. இந்தியாவில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இவர்கள் கரிஸ்மேட்டிக் லீடர்கள். இவர்களை அடுத்து நான் மோடியை பார்க்கிறேன்.
 
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றி என்பது மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி. தலைவனை முன்னிறுத்தி தான் வெற்றி கிடைக்கும்.
 
கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைப்பதாக கூறிய நித்ன் கட்கரிக்கு பாராட்டுக்கள். நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன். தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம்.
 
ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை. எதிர்க்கட்சியின் செயல்பாடு முக்கியமானது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்