முகப்புகோலிவுட்

‘அண்ணாத்த’ 2021 பொங்கலுக்கு வெளியாவது ட்வுட் தான்?? படப்பிடிப்பே இந்த ஆண்டு நடக்க வாய்ப்பு இல்லை!!

  | July 01, 2020 16:59 IST
Super Star Rajinikanth

சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிகாந்த்தின் கூட்டணியில் இப்படம் மூன்றாவது படைப்பாகும்.

கொரோனா வைரஸ் தோற்று தீவிரம் அடைந்துவரும் காரணத்தால், ஆரம்பத்தில் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக திட்டமிடப்பட்ட ரஜினிகாந்த்தின் ‘அண்ணாத்த' திரைப்படம், பின்னர் 2021 பொங்கல் வெளியீட்டிற்கு தள்ளப்பட்டது. இப்போது, அப்படம் மேலும் முன்னோக்கி தள்ளப்படலாம் மற்றும் 2021 பொங்கலுக்கு வெளியிடப்படாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், ‘அண்ணாத்த' படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு 2021-ல் தான் மீண்டும் தொடங்கப்படலாம் என்று தெரிகிறது. படக்குழு உறுப்பினர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இதன் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதி வரை ஒத்திவைக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம்.

எச் வினோத் இயக்கும் ‘வலிமை' படத்துக்கும் இதேபோன்ற முடிவை நடிகர் அஜித் எடுத்ததாக முன்னதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்தின் 168-வது திரைப்படமாக, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த'. இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவை கையாளுகிறார். சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிகாந்த்தின் கூட்டணியில் இப்படம் மூன்றாவது படைப்பாகும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com