முகப்புகோலிவுட்

Ayodhya verdict: ‘தீர்ப்பை மதிக்கிறேன்’ நடிகர் ரஜினிகாந்த் !

  | November 09, 2019 15:55 IST
Ayodhya Verdict

துனுக்குகள்

  • இன்று உச்ச நீதிமன்றம் அயோத்தி தொடர்பான தீர்ப்பை வழங்கியது
  • ரஜினி இந்த தீர்ப்பை வரவேற்று பேட்டி அளித்தார்
  • இந்த தீப்பு இறையான்மைக்கு எதிரானது - சீமான் கருத்து
பாபர் மசூதி, அயோத்தி வழக்கின் தீர்ப்பு காரணமாக இந்திய வரலாற்றில் மிக முக்கிய நாளாக இன்றைய நாள் மாறியிருக்கிறது. சுமார் 70 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பில் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குறிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் எனவும், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வேறு இடத்தில் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து பல ஆளுமைகள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
 
 இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,
 
“உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கின்ற இந்த தீர்ப்பினை நான் மதிக்கிறேன். இந்திய நாட்டின் நம்மைக்காக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீங்களும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
 
மேலும் பல்வேறு திரைத்துறை ஆளுமைகளும் இது குறித்து தங்களது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.  நடிகரும், இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான்,
 
“அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல!
 
பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம்! பாபர் மசூதி இடிப்பென்பது இசுலாமிய இறையியலுக்கு மட்டுமல்லாது, இந்தியாவின் இறையாண்மைக்கும் எதிரானது!” என ட்வீட் செய்துள்ளார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்