முகப்புகோலிவுட்

'திரையுலகில் 45ம் ஆண்டு' - சூப்பர் ஸ்டாரை புகழ்ந்து Common Dp வெளியிட்ட மோகன்லால்..!

  | August 09, 2020 16:52 IST
45 Years Of Rajinism

துனுக்குகள்

 • ஆரம்ப காலத்தில் பல சறுக்கல் வர, இயக்குனர் சிகரம் என்ற மாமனிதரின் பார்வை
 • தற்போது இந்திய திரையுலகில் தனது 45வது ஆண்டை கொண்டாடும் இவருக்கு
 • ரஜினிகாந்திற்கு பல முன்னணி நடிகர்களே ரசிகர்களாக உள்ளனர் என்றால்
'சிவாஜி ராவ் கேக்வாட், இவர் பெங்களூரு நகரில் 1950ம் ஆண்டு பிறந்த ஒரு சாமானியன். இளம் வயதில் முளைத்த சினிமா ஆசையால் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கினார். தனது படிப்பை முடித்த அந்த சிவாஜி ராவ் அப்போது தனக்கு கிடைத்த வேலைகளை செய்துவர, ஒரு காலகட்டத்தில் பேருந்து நடத்துனராக தனது காலத்தை கடத்தினர். அன்றைய மதராஸ் நகரம் நோக்கி தனது கலை பயணத்தை மேற்கொண்டார். மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் தனது நடிப்பு பயிற்சியை மேற்கொண்டார் சிவாஜி ராவ். 

ஆரம்ப காலத்தில் பல சறுக்கல் வர, இயக்குனர் சிகரம் என்ற மாமனிதரின் பார்வை இவர் மேல் விழுந்தது. இவர் நடிப்பை பார்த்த பாலச்சந்தர் நீ ஜொலிக்கும் நட்சத்திரத்தை போல மின்னப்போகிறாய் என்று கூறி 'ரஜினிகாந்த்' என்ற பெயரை சூட்டினார். அதன் பிறகு 1975ம் ஆண்டு வெளியானது 'அபூர்வ ராகம்' என்ற திரைப்படம். 1975 தொடங்கி 1980-க்குள் 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் அன்போடு இவரை தலைவர் என்று அழைக்க சூப்பர் ஸ்டார் என்ற பட்டதோடு தமிழ் திரையுலகின் முடிசூடிய மன்னனாக விளங்குகிறார். 

தற்போது இந்திய திரையுலகில் தனது 45வது ஆண்டை கொண்டாடும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அரசியல் என்ற தளத்தில் இவர் மேல் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் நடிப்பு என்று வரும்போது இவருக்கு நிகர் இவரே என்பது பலரின் கருத்து. விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு பல ரசிகர்கள் இருப்பதை போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பல முன்னணி நடிகர்களே ரசிகர்களாக உள்ளனர் என்றால் அது மிகையல்ல.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com