முகப்புகோலிவுட்

“மாஸுக்கெல்லாம் மாஸ்”- ‘ரஜினி - சிவா’ காம்போ படத்தின் டைட்டில் ரிலீஸ்!!

  | February 24, 2020 18:28 IST
Annaatthe

#Annaatthe - வீடியோவின் பின்னணியின் இசையமைப்பாளர் டி.இமானின் பிஜிஎம் தலைப்பின் மாஸை மேலும் கூட்டும் வகையில் அமைந்துள்ளது.

#Annaatthe - பெயர் வெளியிட்டுக்கு வெறும் போஸ்டரை ரிலீஸ் செய்யாமல், சுமார் 1 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை ரிலீஸ் செய்துள்ளது படக்குழு.

#Annaatthe - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 168வது திரைப்படத்தை இயக்கி வருகிறார், ‘சிறுத்தை' சிவா. இந்தப் படத்தின் ஷூட்டிங், ஐதராபாத்தில் நடந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில், படத்தின் பெயர் என்ன என்பது குறித்த மாஸ் அப்டேட்டை, திரைப்படத்தைத் தயாரிக்கும் கலாநிதி மாறனின் ‘சன் பிக்சர்ஸ்' வெளியிட்டுள்ளது. அதன்படி, ரஜினி - சிவா காம்போவின் படத்திற்கு ‘அண்ணாத்த' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பெயர் வெளியிட்டுக்கு வெறும் போஸ்டரை ரிலீஸ் செய்யாமல், சுமார் 1 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. வீடியோவின் பின்னணியின் இசையமைப்பாளர் டி.இமானின் பிஜிஎம் தலைப்பின் மாஸை மேலும் கூட்டும் வகையில் அமைந்துள்ளது. கடைசியாக ‘விஸ்வாசம்' ஹிட் கொடுத்த சிவா, ரஜினியை வைத்தும் ஹிட் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘தர்பார்' சரியாக போகாததனால், இந்தப் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள். குறிப்பாக ரஜினியின் அரசியல் என்ட்ரி விரைவில் அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘அண்ணாத்த' குறித்தான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. 


 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்