முகப்புகோலிவுட்

தலைவர் 168 படப்பிடிப்பு துவக்கம்..! புகைப்படங்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..,

  | December 11, 2019 14:11 IST
Thalaivar 168

துனுக்குகள்

  • தலைவர் 168 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
  • இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.
  • இப்படத்தில் நடிகை மீனா, குஷ்பு இணைந்துள்ளனர்.
ரஜினிகாந்தின் தலைவர் 168 திரைப்படத்திற்கான படப்புடிப்பு பூஜையுடன் துவங்கப்பட்டது.

தர்பார் திரைப்படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவிருக்கும் திரைப்படத்துக்கு ‘தலைவர் 168' என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு ‘பேட்ட' திரைப்படத்துக்குப் போட்டியாக வெளிவந்த ‘விஸ்வாசம்' திரைப்படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா இப்படத்தை இயக்குகிறார். மேலும், இப்படத்தை ரஜினியின் எந்திரன், பேட்ட ஆகிய திரைப்படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்துக்கு இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில், பிரபல காமெடி நடிகர் ‘பரோட்டா' சூரி இணைந்துள்ளார். அதேபோல், இளம் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை மீனா, குஷ்பு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.
இந்நிலையில், இப்படத்திற்கான தொடக்கப் பூஜை தற்போது நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், இயக்குநர் சிவா, மீனா, குஷ்பு, டி. இமான் மற்றும் படக்குழுவினர் சிலர் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைபடங்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com