முகப்புகோலிவுட்

ரஜினியிசத்தை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்! ட்விட்டரை தெறிக்கும் காமன் டி.பி!!

  | August 17, 2019 14:54 IST
Superstar

துனுக்குகள்

  • ரஜினி திரைத்துறைக்கு வந்து 44ம் ஆண்டுகள் நிறைவாகிறது
  • தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி
  • 44 ஆண்டை கொண்டாடும் விதமாக காமன் டி.பி வைரலாகி வருகிறது
ரஜினி திரைத்துறைக்கு வந்து 44 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக ரஜிக்காக காமன் டி.பி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ரஜினி ரசகர்கள் டிவிட்டர் மற்றும் இன்னும் பிற சமூகவலையதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.
 
 
திரைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பின் தனது நடிப்பு ஆற்றலால் ரசிகர்களை கட்டி இழுத்தவர் ரஜினிகாந்த். ரஜினி என்கிற பிம்பம் தமிழ் நாடு மட்டுமல்லாமல் கடல்தாண்டி வாழும் மொழிதெரியா ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. கிட்டதட்ட மூன்று தலைமுறை ரசிகர்கள் நேசிக்கும் வசீகரத்தால் இன்றும் மின்னல் போல் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். ரஜினி என்கிற பிம்பம் ‘சூப்பர் ஸ்டார்' என்கிற மக்கள் நேசிக்கும், கொண்டாடும் திருவிழாவாக மாறியது காலம் அவருக்கு கொடுத்த பரிசு. வெளிநாடுகளில் அதிக ரசிகர்கள் உள்ளனர் என்றால் அது ரஜிக்குத்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. ரஜினியின் திரை வாழ்க்கை துவக்கம், அவரது பயணம் எல்லாம் அவ்வளவு எளிதாக நடந்தவை அல்ல. அதற்கு பின் ஒரு போராட்டாம் இருந்தது. தனிமனித ஒழுக்க நெறி இருந்தது. அதுவே ரஜினி இன்று கொண்டாடக்கூடிய மனிதராக மாற்றியிருக்கிறது. இன்றும் ததும்பி வழியும் ரசிகர்களின் உள்ளத்தில் ஆகப்பெரும் இடத்தை பெற்றிருக்கிறார். 44 ஆண்டுகள் திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்கு என்பது அலப்பறியது. இன்னும் கொண்டாடும் ஒரு கலைஞனாக திரையில் ஒளிர்ந்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்!!!
 
 
 
 
 
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்