முகப்புகோலிவுட்

கமலைத் தொடர்ந்து பொன்னம்பலத்துக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினிகாந்த்.!

  | July 11, 2020 20:38 IST
Rajinikanth

ரஜினிகாந்த் நடிகர் பொன்னம்பலத்துடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் அவருக்கு உதவ ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைக்காக நடிகர் பொன்னம்பலம் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன், பொன்னம்மபலத்தை அணுகி, அவருக்கு உதவி செய்து வருகிறார். நடிகரின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவுகளையும் உலகநாயகன் ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு, பொன்னம்பலம் மருத்துவமனையில் இருந்து தனது பி.ஆர்.ஓ மூலம், தான் மருத்துவமனையில் இருப்பதையும், ஆக்சிஜன் முகமூடியின் உதவியுடன் சுவாசிப்பதையும் ஒரு வீடியோவாக வெளியிட்டார்.

இப்போது, நடிகரும், அரசியயல்வாதியுமான ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், பொன்னம்பலத்திற்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளார். அவரது உடல்நிலை குறித்து விசாரித்து, அவரது மருத்துவ சிகிச்சையை கவனித்துக்கொள்வதற்கு நிதி உதவி வழங்க ஒப்புக்கொண்டதாக அறிக்கைகள் உள்ளன.

ரஜினிகாந்த் நடிகர் பொன்னம்பலத்துடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் அவருக்கு உதவ ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

56 வயதாகும் பொன்னமபலம் சினிமாவில் ஒரு ஸ்டண்ட்மேனாக தொடங்கி, பின்னர் பல படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார், பின்னர் சில படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழில் அவர் சமீபத்தில் ஒரு போட்டியாளராகக் காணப்பட்டார்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com