முகப்புகோலிவுட்

  விஸ்வரூபம் எடுக்கும் ரஜினியின் புதிய கட்சி! போருக்கு ஆயுத்தமாகும் ரஜினியின் படை!

  | September 06, 2019 13:49 IST
Rajini

துனுக்குகள்

  • 70 சதவீதம் பொருப்பாளர்கள் அமைக்கும் பணி முந்துள்ளது
  • அடுத்த ஆண்டு கட்சி பெயர் பதிவு செய்யப்படலாம்
  • வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் புதிய கட்சி போட்டியிடும்?
ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்து நீண்ட நாட்கள் ஆன நிலையில் தற்போது அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் புதிய கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதனை முன்னிட்டு ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு புதிய அறிவிப்புகளை அறிவித்திருக்கிறார் ரஜினி. அதன் அடிப்படையில் ரஜியின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை சுமார் 70சதவீதம் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நிறைவு என ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் படி மாவட்ட செயலாளர்கள், பொருப்பாளர்கள் என 2 லட்சம் நிர்வாகிகள் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 
மேலும் அதிமுக, திமுகாவில் இருந்து சில மூத்த தலைவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தில் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் புதிய கட்சி நிச்சயமாக போட்டியிடும் என்று தகவல்கள் கூறுகின்றன அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சி பதிவு செய்யும் பணிகள் துவங்கவிருப்பதாக தெரிகிறது.
 
இந்நிலையில் தற்போது பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் பொருப்புக்கு ரஜினியை தலைமை ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டு அதை ரஜினி நிராகரித்து விட்டதாக கூறிப்படுகிறது. அரசியல் அறிவிப்பை வெயிட ராகவேந்திரா மண்டபத்தையே கட்சி அலுவலகமாக மாற்றவும் ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
 
ரஜினி தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்புடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை முடித்து அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. இப்படத்தை அடுத்து சிவாவின் இயக்கத்தில் அடுத்த படம இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் கூறிய நிலையில் கட்சி பணியில் தீவிரம் காட்டி வருகிறார் ரஜினி.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்