முகப்புகோலிவுட்

“கந்தனுக்கு அரோகரா” கந்த சஷ்டி கவசம் அவதூறு வீடியோ குறித்து ரஜினிகாந்த் ட்வீட்..!

  | July 22, 2020 14:04 IST
Kantha Sasti Kavasam

"இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும்"

பூட்டுதல் காரணமாக தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வந்த நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் சாத்தான்குளம் போலிஸ் ஸ்டடியில் இறந்த தந்தை மகன் இரட்டையர் ஜெயராஜ் & பென்னிக்ஸ் வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்று கோரினார். மேலும் அவர் தொடங்கிய ‘சத்தியமா விடவே கூடாது' என்ற ஹாஷ்டேக் மிகவும் வைரலானது.

இந்நிலையில், ரஜினிகாந்த் இப்போது கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக அவதூறு செய்து வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டத்தை கண்டித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் மற்றும் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தமைக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 அவர் தனது பதிவில் “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து,பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈன்ச் செயலை வாழ்க்கையில் வறக்கமுடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக, தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!” எனக் கூறியுள்ளார்.

தொழில் முன்னணியில், ரஜினிகாந்த் தற்போது ‘சிறுத்தை' சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். அதில் நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பொங்கல் வெளியீடாக திட்டமிடபட்டிருந்த இப்படம், கொரோனா காரணமாக, 2021 கோடைகால வெளியீட்டிற்கு தள்ளப்படலாம் என்று தெரிகிறது. அதையடுத்து கமல் ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தலைவர்169' படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் உள்ளன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com