முகப்புகோலிவுட்

பிரான்ஸில் ரீ-ரிலீஸ் ஆகும் ரஜினியின் 80ஸ் ஹிட் ‘மூன்று முகம்’..!

  | July 31, 2020 21:52 IST
Rajinikanth

இப்படம் அந்த காலகட்டத்தில் 175 நாட்கள் திரையரங்களில் ஓடியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாடு முழுவதும் திரையரங்குகள் அனைத்தும் மார்ச் மூன்றாவது வாரத்தில் இருந்து மூடப்பட்டன. திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் வணிகத்தை மீண்டும் தொடங்க அரசாங்கத்திடம் அனுமதி பெறுவார்கள் என்று நம்பினாலும், அவர்கள் இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இதற்கிடையில் பல ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்' படத்தை தொடங்கி பல சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் கடந்த சில மாதங்களாக OTT தங்களில் வெளியாகிவருகின்றன. அனைத்து முன்னணி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களும் எபோதையும் விட மிகவும் பிஸியாக இருப்பதை காணமுடிகிறது. அதே நேரத்தில் தனிப்பட்ட புதுப்புது தளங்களும் உருவாகிவருகின்றன. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் விடுமுறை சிறப்பாக முருகதோஸ் இயக்கிய ‘தர்பார்' படத்தின் மூலம் தலைவர் தரிசனம் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள், 2021 பொங்கல் கொண்டாத்துக்காக சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த' படம் வெளியாகும் என பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால், படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு 2021-ல் தான் மீண்டும் தொடங்கப்படலாம் என்று தெரியவர ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் படப்பிடிப்பு துவங்கப்படும் வரை எந்த அப்டேட்களும் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை.

ஆனால் ‘தலைவர்' ‘ரசிகர்கள் மகிழ்ச்சியடைய இபோது மற்றொரு காரணம் கிடைத்துள்ளது. ரஜினியின் 80ஸ் ஹிட்டான மூன்று முகம் திரைப்படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி பிரான்சில் மறு வெளியீடு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸ் நகரத்தில் இருக்கும் Gaumont Saint-Denis movie hall-ல் வெளியாவதாகக் கூறப்படுகிறது.

1982ஆம் ஆண்டில் வெளியான ‘மூன்று முகம்' திரைப்படத்தை ஜெகந்நாதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரஜினி முன்று கதாப்பாத்திரங்களில் மிரட்டியிருப்பார். இப்படம் அந்த காலகட்டத்தில் 175 நாட்கள் திரையரங்கில் ஓடியுள்ளது. இப்படத்தில் ராதிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சங்கர் கனேஷ் இசையமைத்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com