முகப்புகோலிவுட்

ரூ.150 கோடியை கடந்த ‘தர்பார்’ பாக்ஸ் ஆஃபிஸ்..!

  | January 14, 2020 11:57 IST
Rajinikanth

துனுக்குகள்

 • தர்பார் திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.
 • இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
 • இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ரஜினியின் தர்பார் திரைப்படம் ரூ. 150 கோடியைக் வசூலைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்'. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

லைக்கா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 9-ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. உலகம் முழுக்க 7,000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது.
இப்படம் வெளியாகி 5 நாட்களில், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இதனை லைக்கா நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com