முகப்புகோலிவுட்

வைரலாகும் தர்பார் புதிய போஸ்டர்..!

  | January 03, 2020 09:31 IST
Darbar

துனுக்குகள்

  • தர்பார் திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
  • இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
  • இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தர்பார் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் வைரலாகிவருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்'. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

லைக்கா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. மேலும், இப்படத்திலிருந்து இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், புதிய போஸ்டர் வெளியாகி வைரலாகிவருகிறது. "I am the hand of Justice My sword is the messenger" என்ற வாக்கியத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில், ரஜினிகாந்த் கையில் வாளோடு கோவமாக தன் எதிரிகளை அடித்து கீழே தள்ளுவது போன்று அமைந்துள்ளது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்